Home Featured உலகம் பனாமா விவகாரம்: வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – ஜி-20 நாடுகள் கூட்டமைப்பு...

பனாமா விவகாரம்: வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – ஜி-20 நாடுகள் கூட்டமைப்பு உறுதி!

671
0
SHARE
Ad

G20 embraces,வாஷிங்டன் – இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்டவை அங்கம் வகிக்கும் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு வருகின்ற நவம்பர் மாதம் 11-ஆம் தேதி சீனாவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் ஜி-20 நடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிதி அமைச்சர்கள், வங்கி ஆளுநர்கள், உலக வங்கிகள் கூட்டமைப்பு, ஐ.எம்.எப் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வரி ஏய்ப்பு செய்தவர்கள் மற்றும் பணத்தை மறைத்து வைக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜி-20 நாடுகள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக G20 நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து வரைவு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மூதலீடு ஈட்டும் நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் அறக்கட்டளைகள், அமைப்புகள் ஆகியவற்றின் நிதி நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மை தேவை என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் வலியுறுத்தினர். வெளிப்படைத் தன்மை இருந்தால் தான் அது சர்வதேச பொருளாதார அமைப்பை பாதுகாக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களில் சட்டத்திற்கு புறம்பாக முதலீடு செய்த குற்றச்சாட்டில் ஸ்பெயின் தொழில்துறை அமைச்சர் ஜோஸ் மேனுவல் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வரி ஏய்ப்பு செய்பவர்களால், வறுமைக்கு எதிரான போராட்டம் மட்டுப்படுத்துகிறது என்று உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் கவலை தெரிவித்துள்ளார்.