Home Featured நாடு கோத்தா பாருவில் மேலும் மூன்று பள்ளிகளில் ஹிஸ்டீரியா பாதிப்பு!

கோத்தா பாருவில் மேலும் மூன்று பள்ளிகளில் ஹிஸ்டீரியா பாதிப்பு!

609
0
SHARE
Ad

hysteria 130416கோத்தா பாரு – கிளந்தான் பள்ளிகளில் மாணவர்களிடையே ஹிஸ்டீரியா பாதிப்பு ஒரு “தொற்றுநோய்” போல் அதிகரித்து வருகின்றது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘ஸ்டார்’ இணையதளம் கூறுகின்றது.

அண்மையில் நடந்த சம்பவத்தில், எஸ்எம்கே பெங்காலான் செப்பா1 (5 மாணவிகள்), எஸ்எம்கே கெமுமின் (20 மாணவர்கள்) மற்றும் எஸ்எம்கே கூபாங் கெர்மான் 3 (8 மாணவர்கள்) பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பள்ளி நிர்வாகம், மற்றவர்களுக்கு அது பரவாமல் தடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.