கோலாலம்பூர் – இந்திய நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளைப் பிரதநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு குறுகிய கால வருகை ஒன்றை மேற்கொண்டு கோலாலம்பூர் வந்தடைந்தது. அண்டை நாடுகள் சிலவற்றுக்கும் பயணம் மேற்கொண்டு விட்டு, மலேசியா வந்த அவர்களுக்கு கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகம் கடந்த திங்கட்கிழமை (18 ஏப்ரல்) இரவு விருந்தளித்து கௌரவித்தது.
இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விருந்தில் மலேசியாவின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தனது உரையில் மலேசியா-இந்தியா இடையிலான உறவுகள் குறித்தும், மலேசியாவின் சிறப்புகள் குறித்தும் திருமூர்த்தி வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.
வருகை தந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ், இந்தியத் தூதர் திருமூர்த்தி….
விருந்தில் கலந்து கொண்டவர்களுடன் முன்னாள் துணையமைச்சர் கோகிலன் பிள்ளை, அவருக்கு அடுத்து இந்து தர்ம மாமன்றத் தலைவர் இராதாகிருஷ்ணன்…
விருந்துக்கிடையே அளவளாவி மகிழும் பிரமுகர்கள்…நடுவில் ஆரஞ்சு வண்ண ஆடையில் முன்னாள் துணையமைச்சர் கோகிலன் பிள்ளை….
விருந்தினர்களை மகிழ்விக்க மலேசிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் நடத்தப்பட்ட மலாய் நடனம்…
விருந்தில் கலந்து கொண்ட பிரமுகர்களில் சிலர்….
-செல்லியல் தொகுப்பு