Home Featured தமிழ் நாடு தமிழக தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – மு.க.அழகிரி அதிரடி!

தமிழக தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – மு.க.அழகிரி அதிரடி!

683
0
SHARE
Ad

azhagiriசென்னை – சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறும்போது  சட்டசபை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. இது என்னுடைய ஆதரவாளர்களுக்கும் பொருந்தும் என கூறியுள்ளார்.

திமுகவில் பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலால், கட்சிக்கு எதிராக பேசி வந்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் மு.க.அழகிரி. இவர் அடிக்கடி திமுக பற்றியும், ஸ்டாலின் பற்றியும் அதிரடி கருத்துக்கள் கூறுபவர்.

தற்போது தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்மரமாக உள்ளன.  இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி வரும் தமிழக சட்டசபை தேர்தலில் தானும், தன்னுடைய ஆதரவாளர்களும் யாருக்கும் ஆதரவு அளிக்க போவதில்லை என கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் இவர் திமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை, மாறாக திமுக படுதோல்வி அடையும் என கூறினார். இந்த முறை யாருக்கும் ஆதரவு இல்லை என கூறியுள்ளார் அழகிரி.