Home Featured தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – வைகோ திடீர் அறிவிப்பு!

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – வைகோ திடீர் அறிவிப்பு!

636
0
SHARE
Ad

vaikoசென்னை – வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.

இது அவரது கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, என்னை மையப்படுத்தி சாதி மோதல்களை ஏற்படுத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். மேலும், கோவில்பட்டி தொகுதியில் தனக்குப் பதிலாக விநாயக் ரமேஷ் போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.