Home Featured தமிழ் நாடு மக்கள் நலக்கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு!

மக்கள் நலக்கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு!

726
0
SHARE
Ad

vaiko-vijayakanth5-600சென்னை – மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

80 பக்கங்கள் கொண்ட  தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். அவருடன் விடுதலைச் சிறுத்தை தலைவர் திருமாவளவன், முத்தரசன்  உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர்.

8 பேர் கொண்ட குழுவினரால் 2 மாதமாக தயாரிக்கப்பட்ட அந்தத் தேர்தல் அறிக்கையில், நெசவாளர் கடன் தள்ளுபடி செய்யப்படுவது உள்பட 130 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

#TamilSchoolmychoice

அதன் முழு விவரம் பின்வருமாறு:-
* தமிழகத்தில் கூட்டணி ஆட்சி
* அரசுக்கு அறிவுரை வழங்க நிபுணர்கள் குழு
* அரசு பணிகள் அனைத்தும் மக்கள் பங்கேற்புடன் பொது கண்காணிப்பு
* லோக் அயுக்தா அமைப்பு கொண்டுவரப்படும்
* நேர்மையான நிர்வாகம், தூய்மையான சேவைக்கு சேவை பெறும் உரிமை
* முழு மது விலக்கு, மது அருந்தும் எண்ணம் ஒழிக்க மது ஒழிப்பு பிரசாரம்
* சிறுபான்மை, அருந்ததியர், தாழ்த்தப்பட்டார் நலன் காக்கப்படும்
* வேளாண் உற்பத்தி 3 மடங்கு அதிகரிக்க திட்டம்
* விவசாய கடன்கள் அறவே ஒழிப்போம்
* விவசாய வளர்ச்சியில் முழுக்கவனம் செலுத்தப்படும்
* சிறு தொழில் வளர பல்வேறு திட்டங்கள்
* கல்வித்துறையில் புரட்சி உருவாக்கப்படும்
* இலவச கல்வி, இலவச சிகிச்சை
* மாணவர் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
* மகளிர் குழு கடன் அரசே செலுத்தும்
* பால் கட்டணம் குறைக்கப்படும்
* கர்ப்பிணி பெண்கள், வறுமை கோட்டுக்கு கீழ் வாழபவர்களுக்கு இலவச பஸ் பயணம்
* பட்டதாரி பெண்களுக்கு வீட்டுக்கு ஒரு அரசு வேலை
* நடமாடும் மருத்துவ சேவை
* கிராமங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம்
* வீடு தோறும் இலவச குடி நீர்
* நெசவாளர் கடன் தள்ளுபடி செய்யப்படும்
* மீனவர் , மாற்று திறனாளி நலன், குழந்தைகள் நலன் காக்கப்படும்
* அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்போம்
* 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு
* வெளிநாட்டு தமிழர் நலன் காக்க தனி அமைச்சகம்
* ஏழைகளுக்கு இலவச வீடு
* சாலையோர வியாபாரிகளுக்கு ஒரு லட்சம் கடன்
* திருநங்கைகள் பணியில் இட ஒதுக்கீடு
* மீனவர்களுக்கு ஓய்வூதிய திட்டம்
* திருநங்கைகளுக்கு தனி குடியிருப்பு

இவ்வாறு பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.