Home Featured உலகம் அமெரிக்க அதிபர் முன் அறிவிப்பின்றி ஈராக் வந்தடைந்தார்! ஐஎஸ்ஐஸ் எதிரான போர் முற்றுகிறது!

அமெரிக்க அதிபர் முன் அறிவிப்பின்றி ஈராக் வந்தடைந்தார்! ஐஎஸ்ஐஸ் எதிரான போர் முற்றுகிறது!

662
0
SHARE
Ad
பாக்தாத் – அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் (படம்) இன்று முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஈராக் வந்தடைந்துள்ளார். வழக்கமாக அமெரிக்காவின் உயர் பதவியில் உள்ளவர்கள் இதுபோன்ற பயணங்களை பொதுவாக மேற்கொள்வதில்லை என்பதால் பிடனின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
U_S_Vice President Joe Biden
 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் குழுவின் பிடியில் சிக்கியுள்ள மோசுல் நகரை மீண்டும் கைப்பற்ற ஈராக் நாட்டின் பாதுகாப்புப் படைகள், அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் போருக்கான அடித்தளமும், வியூகத் திட்டங்களும் அமைத்து வரும் இந்த நேரத்தில் ஜோ பிடன் ஈராக் வந்திருக்கின்றார்.

மோசுல் மீதான தாக்குதல் எப்போது தொடங்கும் என்பது இன்னும் தெரியவில்லை எனினும், இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜானுக்கு முன்பாக மோசுலைக் கைப்பற்ற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஈராக் படைகளும், அமெரிக்கப் படைகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன என அமெரிக்க தற்காப்புத் துறை அமைச்சர் ஆஷ் கார்ட்டர் கோடி காட்டியுள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆஷ் கார்ட்டரும், அமெரிக்க வெளியுறவு அமைச்சரான ஜோன் கெர்ரியும் ஈராக்கிற்கு வருகை மேற்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.