Home Featured நாடு மாயமான ஹெலிகாப்டர் ஸ்ரீ அமானில் தரையிறங்கியதா? – சரவாக் காவல்துறை மறுப்பு!

மாயமான ஹெலிகாப்டர் ஸ்ரீ அமானில் தரையிறங்கியதா? – சரவாக் காவல்துறை மறுப்பு!

855
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கூச்சிங் – மாயமான ஹெலிகாப்டர் ஸ்ரீ அமானில் அவசரமாகத் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளிவரும் தகவலை சரவாக் காவல்துறை மறுத்துள்ளது.

“மாயமான ஹெலிகாப்டர் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் சரவாக்கில் ஹெலிகாப்டர் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவலை உள்நாட்டு வான் போக்குவரத்துத் துறை (டிசிஏ) மறுத்துள்ளது” என்று சரவாக் காவல்துறை ஆணையர் முகமட் சப்து ஒஸ்மான் கூச்சிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice

 

Comments