Home Featured நாடு சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: உடைந்த பாகங்கள் பத்தாங் லுப்பார் ஆற்றின் அருகில் கண்டுபிடிப்பு – நஜிப்...

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: உடைந்த பாகங்கள் பத்தாங் லுப்பார் ஆற்றின் அருகில் கண்டுபிடிப்பு – நஜிப் அறிவிப்பு!

806
0
SHARE
Ad

கூச்சிங் – காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் சிலவற்றை பத்தாங் லுப்பார் ஆற்றின் அருகில் மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளதாக பிரதமர் நஜிப் இன்று கூச்சிங்கில் அறிவித்தார்.

ஏற்கனவே, அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த துணையமைச்சர் நோரியா காஸ்னோன் உடல் மீட்கப்பட்டுள்ளது.

Najib-briefing-sarawak helicopter crashஇன்று கூச்சிங்கில், காணாமல் போன ஹெலிகாப்டர் குறித்த விளக்கத்தைப் பெறும் நஜிப்…

#TamilSchoolmychoice

நீர் மிதவை கருவி, நாற்காலி, கதவின் உடைந்த பாகம், மற்றும் சில உடைந்த பாகங்கள் ஆகியவை ஆகக் கடைசியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

“ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் யாராவது இன்னும் உயிரோடிக்கிறார்களா என்பது குறித்த முடிவுக்கு நம்மால் இன்னும் வர முடியவில்லை’ என்றும் நஜிப் கூறியுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் அதிகபட்ச ஏற்பாடுகளோடு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் நஜிப் உறுதியளித்துள்ளார்.

ஹெலிகாப்டரின் உடைந்த – சிதறிய பாகங்கள் மிகப் பரந்த பகுதியில் கிடப்பதால் மீட்புப் பணிகள் சிரமமான கட்டத்தில் இருக்கின்றன என்றும் நஜிப் விளக்கியுள்ளார்.

இருப்பினும், அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அனைத்து அரசாங்க உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும் நஜிப் உறுதியளித்துள்ளார்.