மேற்கு மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களையும், சமூகப் போராட்டவாதிகளையும் வரிசையாக சரவாக்கில் நுழைய விடாமல் தடுத்து விட்டு, தேர்தலில் உள்நாட்டுக் கட்சிகளுக்கு மட்டும் அரசியல் முக்கியத்துவம் கொடுத்து தேசிய முன்னணி இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றது.
நஜிப்பின் 1எம்டிபி விவகாரம் வாக்காளர்கள் மத்தியில் – அவர்களின் மனங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துமா? –
பாஸ் கட்சியின் துணை இல்லாமல் சில சச்சரவுகளோடு களம் இறங்கியிருக்கும் ஜசெக, பிகேஆர் கட்சிகளுக்கு எத்தகைய ஆதரவு கிடைக்கும்? –
என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை தரப் போகும் தேர்தலாகவும் சரவாக் தேர்தல் அமையப் போகின்றது.
அதே வேளையில் சரவாக் தேர்தல் முடிவுகள் எத்தகையதாக இருந்தாலும், அதனால் மேற்கு மலேசிய அரசியலில் மாற்றம் இருக்காது – பாதிப்புகள் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சரவாக் தேர்தலைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கும் புதிய அமைச்சர்கள் இடம் பெறக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று மாலை 7 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.