ஸ்ரீ அமான் – கடந்த வாரம் வியாழக்கிழமை பாத்தாங் லூப்பாரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், இதுவரை 5 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஆறாவது நபரான பிலிப்பைன்ஸ் விமானி ரூடோல்ப் ரெக்ஸ் ராகாசைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
தேடுதல் பணிக்கு உதவ கோலாலம்பூரில் இருந்து டெலெகாம் மலேசியாவைச் சேர்ந்த இரண்டு சிறிய இரக ஆளில்லா விமானங்கள் (Dron mers999) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
122 மீட்டர் உயரத்தில், 5 கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 20 நிமிடங்களுக்கு பறக்கக் கூடிய சக்தி வாய்ந்த அந்த இரண்டு சிறிய இரக ஆளில்லா விமானங்களும் அப்பகுதியில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்கும் வசதி கொண்டது.
இதனிடையே, விபத்தில் சிக்கிய அந்த ஹெலிகாப்டர் பிலிப்பைன்சில் பதிவு செய்யப்பட்டது என்பதை பிலிப்பைன்ஸ் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையும் உறுதி செய்துள்ளது.