Home Featured உலகம் சிங்கை நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட் – மயங்கி விழுந்தார்! அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது!

சிங்கை நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட் – மயங்கி விழுந்தார்! அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது!

981
0
SHARE
Ad

சிங்கப்பூர் – சிங்கப்பூரின் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட் (படம்), நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை, இதயநோய் தாக்கியதாகவும், மூளைக்குச் செல்லும் நரம்புப் பகுதியில் ஏற்பட்ட பலவீனத்தால், இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டதால் இந்நிலைமை ஏற்பட்டதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

Heng Swee Keat

எனது அமைச்சரவைக் குழுவில் மதிப்பு வாய்ந்த ஓர் உறுப்பினர் ஹெங்-அவர் உடல் நலம் அடைய பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் லீ சியன் லூங் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் ஹெங் வகித்து வந்த நிதியமைச்சுப் பணிகளை சிங்கையின் துணைப் பிரதமர் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மன் முன்னாள் நிதியமைச்சரும் ஆவார்.

உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் உடல் நலம் தேறி வருவதாகவும் அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நல்ல முறையில், உடனடியாக உடல் நலம் தேறி வரவேண்டும் என்றும், அவருக்காக பிரார்த்தனை செய்வதாகவும், அவரது குடும்பத்தினருக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆறுதல் கூறுவதாகவும் சிங்கை அதிபர் டோனி டான் கெங் யாம் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.