Home Featured நாடு “பாஸ் கட்சிக்கு நாங்கள் பக்காத்தானில் சேர அழைப்பு விடுக்கவில்லை”-வான் அசிசா விளக்கம்!

“பாஸ் கட்சிக்கு நாங்கள் பக்காத்தானில் சேர அழைப்பு விடுக்கவில்லை”-வான் அசிசா விளக்கம்!

661
0
SHARE
Ad

Wan-Azizah-Wan-Ismailகோலாலம்பூர் – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியில் சேர பாஸ் கட்சிக்கு நாங்கள் எந்த அழைப்பும் விடுக்கவில்லை என பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் விளக்கமளித்துள்ளார்.

“சிலாங்கூர் மந்திரிபெசார் அஸ்மின் அலி தனிப்பட்ட முறையில் பாஸ் கட்சிக்கு விடுத்த அழைப்பு அது” என்றும் வான் அசிசா கூறினார்.

இருப்பினும், அஸ்மின் அலியின் அழைப்பில் தவறு ஏதும் இல்லை என்றும், சிலாங்கூர் மாநிலத்தில் பாஸ்-பிகேஆர் இரண்டும் ஒத்துழைப்புடன் கூட்டாகத்தான் ஆட்சி செய்து வருகின்றன என்பதால், அஸ்மின் அலியின் அந்த அழைப்பு நியாயமானதே என்றும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், வான் அசிசாவின் இந்த மறுப்பு, கட்சியில் தான் இன்னும் அதிகார பீடத்தில் உள்ள தேசியத் தலைவர் என்பதைக் காட்டும் வகையிலும், அஸ்மின் அலிக்கு எதிரான போக்கை அவர் கடைப் பிடிக்கின்றார் என்பதைக் காட்டும் விதமாகவும் அமைந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.