Home Featured தமிழ் நாடு பாமக வேட்பாளர் திருப்பதி அதிமுகவில் இணைந்தார்!

பாமக வேட்பாளர் திருப்பதி அதிமுகவில் இணைந்தார்!

804
0
SHARE
Ad

pmkசென்னை – தேர்தல் இன்னும் நாளை மறுநாள் நடைப்பெற உள்ள நிலையில், பாமக வேட்பாளர் ஒருவர், அதிமுக வேட்பாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ். இவர் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவார் என்றும், அன்புமணி முதல்வரான பின்னர் இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப் படுவார்கள் என்றும் மருத்துவர் ராமதாஸ் அன்றாடம் கூறி வருகிறார்.

அன்பு மணியோ, நான் இலவச கல்வி கொடுப்பேன், நான் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவேன், நான் வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்று மிகக் ஆக்ரோஷமாக பிரச்சாரமும் செய்து வருகிறார். தமிழக மக்கள் அன்புமணி என்கிற படித்த இளைஞர்தான் வேண்டும் என்று தம்மிடம் கூறுவதாகவும் அன்புமணி தெரிவித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

pmk_14இதற்கிடையில் இன்று நான்குநேரி பாமக வேட்பாளரான திருப்பதி, அதே தொகுதியின் அதிமுக வேட்பாளரான நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தம்மை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அதிமுகவின் தேர்தல் அறிக்கைத் தம்மை மிகவும் கவர்ந்துள்ளது என்றும் திருப்பதி கூறியுள்ளார்.