Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகளில்!

தமிழகத் தேர்தல்: இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகளில்!

455
0
SHARE
Ad
  • Selliyal Oruvari seithigalகாலை 7.00 மணி முதல் (மலேசிய நேரம் காலை 9.30 மணி) தமிழக வாக்களிப்பு நிலையங்கள் செயல்படத் தொடங்கும்.
  • 232 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகின்றது. அரவக் குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு வாக்களிப்பு மே 23ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்தல் அறிக்கையில் கண்டுள்ள இலவசங்களை நிறைவேற்ற எத்தகைய நிதிகள் மூலம் நிறைவேற்றப் போகிறீர்கள் என விளக்கம் கேட்டு திமுக, அதிமுக தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்த கடிதத்திற்கு, இரண்டு கட்சிகளும் இணைய அஞ்சல் மூலம் பதில் அனுப்பியுள்ளன.
  • சாதி உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காக மதிமுக கட்சித் தலைவர் வைகோவுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
  • தேர்தல் பரப்புரைக்கான காலக்கெடு முடிந்த பின்னரும் சமூக வலைத் தள ஊடகங்களில் திமுக தொடர்ந்து பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டி தேர்தல் ஆணையம் திமுக தலைவர் கருணாநிதிக்கு விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளது.
  • தமிழக வாக்காளர்கள் அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வண்ணம் இன்று காலையிலேயே சென்று வாக்களிக்க வேண்டும் என ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • திருப்பூரில் 3 கொள்கலன் லாரிகளில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் தங்களுக்கே உரியது என்றும், ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பணத் தட்டுப்பாட்டுக்காக, கோவை தலைமையக வங்கியிலிருந்து அந்தப் பணம் விசாகப் பட்டினம் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
  • உளுந்தூர் பேட்டை பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு, அரசு அதிகாரிகளிடம் அநாகரிகமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டார் என அரசு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் செய்ததைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.