Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி தேர்தலும் மே 23ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

தமிழகத் தேர்தல்: தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி தேர்தலும் மே 23ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

715
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சென்னை – தமிழகத்தில் அரவக்குறிச்சி சட்டமன்றத்துக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அதிரடியாக, தஞ்சாவூர் சட்டமன்றத்துக்கான தேர்தலையும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.

இன்று தஞ்சாவூர் சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெறாது என்றும், பதிலாக மே 23ஆம் தேதி அந்தத் தொகுதிக்கான தேர்தல் நடத்தப்பட்டு, மே 25ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதே நாளில்தான் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலும் நடைபெறுகின்றது.

#TamilSchoolmychoice

வாக்காளர்களுக்கு பண விநியோகம் தொடர்பில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தனது விரிவான விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு தொகுதிகளின் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், 232 தொகுதிகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகின்றது.