Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: மலேசிய நேரம் காலை 10.00 மணி நிலவரங்கள் – ஒரு வரிச் செய்திகளில்!

தமிழகத் தேர்தல்: மலேசிய நேரம் காலை 10.00 மணி நிலவரங்கள் – ஒரு வரிச் செய்திகளில்!

485
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigalஇன்று காலை மலேசிய நேரம் 10.00 மணி வரையிலான தமிழகத் தேர்தல் வாக்களிப்பு நிலவரங்கள்:

  • அரும்பாக்கத்தில் தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி வாக்களித்துள்ளார்.
  • திருவான்மியூர் வாக்களிப்பு மையத்தில் நடிகர் அஜித் மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார்.
  • ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி வாக்களிப்பு மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்துள்ளார்.
  • பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் எத்தனை வாக்குகள் செலுத்தப்பட்டன என்ற விவரங்கள் வெளியிடப்படும்
  • திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள சாரதா நடுநிலைப் பள்ளி வாக்களிப்பு மையத்தில் வாக்களித்துள்ளார்.
  • ஆம்பூர் தொகுதியில் உள்ள ஒரு மின்னணு இயந்திரம் பழுதாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
  • தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்துள்ளார்.
  • கடுமையான வெயில் காரணமாக வாக்களிப்பு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • விருகம்பாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வாக்களித்துள்ளார்.