Home Featured உலகம் 69 பேருடன் எகிப்து விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்!

69 பேருடன் எகிப்து விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்!

464
0
SHARE
Ad

EgyptAir-planeபாரீஸ் – பாரீசிலிருந்து கெய்ரோவுக்கு 59 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் புறப்பட்ட எகிப்துஏர் விமானம் (MS804) நடுவானில் ரேடார் தொடர்பிலிருந்து விடுபட்டு மாயமானது.

பாரீசிலிருந்து உள்நாட்டு நேரம் 23:09 மணிக்கு கிளம்பிய விமானம், வானில் 11,000 மீட்டர்கள் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, ரேடாரில் இருந்து மறைந்தது.

அச்சமயத்தில் அவ்விமானம் எகிப்திய வான்வெளியில் பறந்து கொண்டிருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

கடந்த மார்ச் மாதம், எதிப்து விமானம் ஒன்று மனநிலை சரியில்லாத ஒருவரால் கடத்தப்பட்டு சைப்ரசில் தரையிறக்கம் செய்யப்பட்டது. பின்பு 6 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவ்விமானம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.