Home Featured தமிழ் நாடு தமிழகம்: தஞ்சை, அரவக் குறிச்சி தேர்தல்கள் ஜூன் 13இல் நடைபெறும்!

தமிழகம்: தஞ்சை, அரவக் குறிச்சி தேர்தல்கள் ஜூன் 13இல் நடைபெறும்!

599
0
SHARE
Ad

elections-polls-evm-voting-041013சென்னை – ஒத்தி வைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஜூன் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நடைமுறையில் இல்லாத வழக்கமாக, வாக்கு எண்ணிக்கை எப்போதும் நடைபெறும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்துரைத்திருந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, “உடனடியாக அங்கே தேர்தல் நடத்துவது பற்றி அறிவிக்காவிட்டால் நானே களத்தில் இறங்கி அறப்போராட்டத்தை நடத்துவேன். தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்த தேதியில் அந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தலை நடத்த முன் வரட்டும்” என்று காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice