Home Featured உலகம் வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழையும்போது சுடப்பட்டவன் நிலைமை கவலைக்கிடம்!

வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழையும்போது சுடப்பட்டவன் நிலைமை கவலைக்கிடம்!

787
0
SHARE
Ad

White Houseவாஷிங்டன் – கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பாதுகாப்பு வளையத்திற்குள் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்ததால், சுடப்பட்டவனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, அந்நபர் சிகிச்சை பெற்றுவரும் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனை அறிவித்துள்ளது.

சுடப்பட்ட அந்த நபர் ஜெஸ்ஸி ஓலிவரி என அடையாளம் காட்டப்பட்டுள்ளார். அவர் பென்சில்வானியா மாநிலத்தின் ஆஷ்லாண்ட் பகுதியைச் சேர்ந்தவராவார்.

அமெரிக்க இரகசிய உளவுத் துறை சார்பாக விடுக்கப்பட்ட அறிவிப்பில், பாதுகாவலர்கள் ஆயுதத்தைக் கீழே போடுமாறு விடுத்த எச்சரிக்கையையும் மீறி, அந்நபர் முன்னேறி வந்த காரணத்தால் அவன் சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இருப்பினும் அவன் வெள்ளை மாளிகைக்குள் நுழையவில்லை என்றும் அதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டான் என்றும் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாரும் காயமடையவில்லை.

சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதால், இதுகுறித்து மேலும் விளக்கமாகக் கூற முடியாது என அமெரிக்க இரகசிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.