இந்த ஆண்டு ஜி-7 மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் இரண்டு நாட்கள் நடைபெறும் இலங்கை அதிபர் சிறிசேனா சிறப்பு அழைப்பாளராக ஜப்பான் அரசால் அழைக்கப்பட்டுள்ளார். தென் மேற்கு டோக்கியோவில் உள்ள ஷிமாவில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பொருளாதார, பயங்கரவாதம் மற்றும் அகதிகள் பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. தென் சீனக்கடலில் நிலவி வரும் சூழல் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Comments