Home Featured உலகம் ஐநாவில் 2வது ஆண்டாக அனைத்துலக யோகா தினம்! ஈஷா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவ் தலைமையேற்கின்றார்!

ஐநாவில் 2வது ஆண்டாக அனைத்துலக யோகா தினம்! ஈஷா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவ் தலைமையேற்கின்றார்!

510
0
SHARE
Ad

நியூயார்க் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முயற்சி காரணமாக ஐக்கிய நாட்டு சபையால் அனைத்துலக யோகா தினம் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு, முதலாவது அனைத்துலக யோகா தினம் நியூயார்க்கில், விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன், “வாழும் கலை” அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Jakki Vasudev-IPL final-நேற்று (ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தை பெங்களூருவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டு இரசித்த போது – அவருக்கு அருகில் குறுந்தாடியுடன் இருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுராக் தாகூர்…

#TamilSchoolmychoice

நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக யோகா தினம் அடுத்த மாதம் கொண்டாடப்படுகின்றது. இந்த முறை ஆன்மிகத் தலைவரும், ஈஷா யோகா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நிகழ்ச்சிகளுக்குத் தலைமையேற்கின்றார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா.வின் தலைமையக வளாகத்தில் இந்த யோகா தினம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமெரிக்காவின் இந்தியத் தூதரகம் செய்து வருகிறது.