Home Featured நாடு “ஹூடுட்டுக்குப் பதிலாக 1எம்டிபிக்காக பதவி விலகுங்கள்” – மசீச, கெராக்கான், மஇகா தலைவர்களுக்கு பாஸ் துணைத்...

“ஹூடுட்டுக்குப் பதிலாக 1எம்டிபிக்காக பதவி விலகுங்கள்” – மசீச, கெராக்கான், மஇகா தலைவர்களுக்கு பாஸ் துணைத் தலைவர் அறைகூவல்!

657
0
SHARE
Ad

கோத்தாபாரு- ஹூடுட் சட்டம் அமுலாக்கப்பட்டால் ராஜினாமா செய்துவிடுவோம் என பயமுறுத்தும் தேசிய முன்னணி தலைவர்கள், அதற்குப் பதிலாக பல கோடி ரிங்கிட் கொண்ட 1 எம்டிபி விவகாரத்திற்காக பதவி விலக முன்வர வேண்டும் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் (படம்) கூறியுள்ளார்.

Tuan Ibrahim Tuan Man“மக்களுக்கான பிரச்சனையாகப் பார்க்கப்படும் 1எம்டிபி மற்றும் ஜிஎஸ்டி (பொருள்சேவை வரி) ஆகிய காரணங்களுக்காக அவர்கள் ராஜினாமா செய்வதை நாங்கள் பார்க்க விரும்புகின்றோம்” என அவர் மேலும் கூறினார்.

ஹூடுட் சட்டம் அமுல்படுத்தப்பட்டால், பதவி விலகுவோம் என மசீச தலைவர் லியோவ் தியோங் லாய், கெராக்கான் தலைவர் மா சியூ கியோங், மஇகா தலைவர் டாக்டர் சுப்ரமணியம் ஆகியோர் அறிவித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

கோத்தாபாருவின் பாஸ் கட்சியின் இளைஞர் பகுதி மாநாட்டை தொடக்கி வைத்த பின்னர், பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது துவான் இப்ராகிம் மேற்கண்டவாறு கூறினார்.

“ராஜினாமா செய்வோம் என மிரட்டுவது அரசியல் முதிர்ச்சியை காட்டவில்லை” என்றும் அவர் சாடினார்.

ஷாரியா நீதிமன்றங்களுக்கான சட்டத்திருத்தத்தை தனிநபர் மசோதாவாக முன்மொழிந்திருப்பதன் மூலம் பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி ஹாடி அவாங் ஹூடுட் சட்டத்தை கிளந்தான் மாநிலத்தில் அமுல்படுத்த முனைந்துள்ளார்.

அதற்கான எதிர்ப்புகள் பல்வேறு தரப்புகளில் இருந்தும் அதிகரித்து வருகின்றன.