Home Featured வணிகம் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ், கேஎல்ஐஏ டிரான்சிட் பிற்பகல் 3 மணி முதல் துவக்கம்!

கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ், கேஎல்ஐஏ டிரான்சிட் பிற்பகல் 3 மணி முதல் துவக்கம்!

770
0
SHARE
Ad

kliaexpressகோலாலம்பூர் – கோளாறுகள் சரி செய்யப்பட்டதையடுத்து, கேஎல்ஐஏ இரயில் போக்குவரத்துச் சேவை சனிக்கிழமை மதியம் 3 மணியிலிருந்து துவங்குவதாக எக்ஸ்பிரஸ் இரயில் லிங்க் செண்ட்ரியான் பெர்ஹாட்  (இஆர்எஎல்) அறிவித்துள்ளது.

நேற்று ஏற்பட்ட புயல் காரணமாக தண்டவாளங்களில் விரிசல், இரயில் பெட்டிகள் மற்றும் மின் வயர்களில் சேதம் ஆகியவை ஏற்பட்டுள்ளதாக இஆர்எல் தனது பேஸ்புக்கில் அறிவித்துள்ளது.

“இதன் காரணமாக கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் மற்றும் கேஎல்ஐஏ டிரான்சிட் ஆகிய இரண்டும் இன்று அதிகாலை 4.30 மணியில் இருந்து மதியம் 3 மணிவரை ஒரே சேவையாக இயங்கும்” என்று இஆர்எல் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice