Home Featured கலையுலகம் “மயங்காதே இளைஞர்களைக் கவரும் படம்” – ஷைலா நாயர் (காணொளியுடன்)

“மயங்காதே இளைஞர்களைக் கவரும் படம்” – ஷைலா நாயர் (காணொளியுடன்)

858
0
SHARE
Ad

Mayangaathe 5கோலாலம்பூர் – சிகே, ஷைலா நாயர் நடிப்பில் நாளை ஜூன் 9-ம் தேதி மலேசியா முழுவதும் வெளியாகிறது ‘மயங்காதே’.

இத்திரைப்படத்தை சிகே பிலிம்ஸ், சாய் பா விஷன், டச் ட்ரானிக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து சுமார் 6 லட்சம் ரிங்கிட் பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.ஷைலா நாயர் முதல் முறையாக சாய் பா விஷன் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் ஷைலா நாயரின் கதாப்பாத்திரம் படம் பார்க்கும் ரசிகர்களை மிகவும் கவரும் வகையில், படத்தின் திருப்புமுனைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

#TamilSchoolmychoice

கதைப்படி, காதல், பழிவாங்கல் என இரண்டு விதமான காட்சிகளுக்குத் தனது முகபாவணைகளை அவர் வெளிப்படுத்த வேண்டும்.

அந்த வகையில், தனக்குக் கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார்.

அதேவேளையில், படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளில் அவர் அணிந்து வரும் நாகரீக உடைகளும், நடனமும் பெண்களை வெகுவாகக் கவரும் வகையிலும் அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தில் நடித்தது குறித்து ஷைலா நாயர் கூறுகையில், “நான் ஒரு பாடகியாகத் தான் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். ஆனால் சிகே என்னை மைந்தன் படத்தில் நடிக்க அழைத்த போது அந்தக் கதாப்பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. என்றாலும் முதலில் நடிக்க மறுத்தேன். ஆனால் அந்தக் கதாப்பாத்திரத்தை நான் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று சிகே எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்தார். அதன் படி அப்படத்தில் நான் நடித்து அது மாபெரும் வெற்றியடைந்த பிறகு தான் எனக்குத் தெரிந்தது என்னால் நன்றாக நடிக்க முடிகிறது என்று. அதனைத் தொடர்ந்து இப்போது மயங்காதே-வில் ஒரு நல்ல கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

நாளை வெளியாகும் மயங்காதே திரைப்படம் குறித்து ஷைலா நாயர் தனது ரசிகர்களுக்கு சொல்லும் தகவலை இங்கே காணொளி வடிவில் காணலாம்.