Home Featured உலகம் வத்திகான் நகருக்கான மலேசியத் தூதராக பெர்னார்ட் டொம்போக் நியமனம்!

வத்திகான் நகருக்கான மலேசியத் தூதராக பெர்னார்ட் டொம்போக் நியமனம்!

852
0
SHARE
Ad

வத்திகான் – கிறிஸ்துவர்களின் மதத் போப்பாண்டவரின் அதிகாரத்திற்கும், ஆட்சிக்கும் உட்பட்ட வத்திகான் நகருக்கான மலேசியத் தூதராக டான்ஸ்ரீ பெர்னார்ட் டொம்போக் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை டொம்போக் தனது அங்கீகார நியமனக் கடிதத்தை போப்பாண்டவரிடம் சமர்ப்பித்தார்.

bernard dompokபோப்பாண்டவரிடம் அங்கீகாரக் கடிதம் வழங்கும் டொம்போக்…

#TamilSchoolmychoice

வத்திகானில் நிரந்தரமாக தூதரக அலுவலகத்தோடு தங்கும் முதல் மலேசியத் தூதர் டொம்போக் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

வத்திகானில் தூதரகம் கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் மலேசியா  83வது நாடாக இடம் பெறுகின்றது.

டொம்போக் தற்போது அல்பானியா, மால்டா நாடுகளுக்கும் தூதராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். சபாவைச் சேர்ந்த இவர், அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமாவார்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மலேசியாவுக்கும், வத்திகானுக்கும் இடையில் தூதரக உறவுகள் தொடங்கப்பட்டன. போப்பாண்டவரின் வத்திகான் நகருடன் தூதரக உறவுகளைக் கொண்ட 179வது மலேசியா திகழ்கின்றது.