Home Featured நாடு ஜூன் 19-ம் தேதி மலேசிய இந்துதர்ம மாமன்ற ஏற்பாட்டில் மாபெரும் யோகா நிகழ்வு!

ஜூன் 19-ம் தேதி மலேசிய இந்துதர்ம மாமன்ற ஏற்பாட்டில் மாபெரும் யோகா நிகழ்வு!

744
0
SHARE
Ad

348404-afp-shilpa-shetty-doing-yoga-edகோலாலம்பூர் – வரும் ஜூன் 19-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மலேசிய இந்து தர்ம மாமன்றம் சார்பில் மிகப் பெரிய அளவிலான யோகா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலேசிய இந்து தர்ம மாமன்றமும், மைபிபிபி தேசிய இளைஞர் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வை, கூட்டரசுப் பிரதேச அமைச்சு, மலேசியக் காவல்படை (PDRM), கோலாலம்பூர் மாநகர சபை (DBKL), இந்து இளைஞர் அமைப்பு (HYO), மலேசியன் சிலோனிஸ் காங்கிரஸ் (MCC), மலேசியத் தெலுங்கு சங்கம் (TAM), இஸ்கான் (ISCKON) என இன்னும் பல அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

சிலாங்கூரில் கடந்த ஆண்டு, ஜூன் மாதம் 21-ம் தேதி, பத்துமலை ஸ்ரீசுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில், நடைபெற்ற யோகா நிகழ்வில் 2,200 பேர் பங்கேற்றனர்.

#TamilSchoolmychoice

1,000 பங்கேற்பாளர்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டதை விடக் கூடுதலான மக்கள் பங்கேற்றனர். இதனையடுத்து, இந்த ஆண்டு, கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசிய இந்துதர்ம மாமன்றம் என்ற அரசு சாரா இயக்கம், நாடெங்கிலும் 35 கிளைகளுடன் மலேசியாவிலுள்ள இந்துக்களுக்காக சேவையாற்றி வரும் ஒரு அமைப்பாகும். மக்களுக்கு சமயம் சார்ந்த கல்வியை போதிப்பதும், ஆன்மீக உணர்வை மேம்படுத்துவதும், சமூக சேவையாற்றுவதும் அதன் நோக்கமாகும்.