கோலாலம்பூர் – சபாவின் ரணாவ் பகுதியை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் அமைச்சர் டத்தோஸ்ரீ மாதியூஸ் தங்காவ் தெரிவித்துள்ளார்.
அது இன்னும் இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் நடக்கலாம் என முந்தைய பதிவுகளின் அடிப்படையில் அவர் கணித்து அறிக்கை விடுத்துள்ளார்.
“நிலநடுக்கங்கள் கணிக்க முடியாத ஒன்று. ஆனால் முந்தைய பதிவுகளை வைத்து, அது மீண்டும் வரும் காலத்தையும், அதன் பகுதிகளையும் கணிக்கலாம்” என்று மாதியூஸ் ‘த ஸ்டார்’ இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 1976-ம் ஆண்டு, லஹாட் டத்துவில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.