இதன் மூலமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்தச் சாதனைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
PSLV C34 விண்கலம், விண்வெளியில் 10 மடங்கு குறைந்த செலவில் 20 செயற்கை கோள்களை செலுத்தப் போகிறது.
மேலும், அந்த 20 செயற்கைக் கோள்களில் இரண்டு, சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம், புனே பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவச் செயற்கைக் கோள்களாகும்.
அதோடு, 1 கிலோ எடையுள்ள ஸ்வாயாம் ( SWAYAM) என்ற இந்திய செயற்கைக் கோளும் இந்த விணகலத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.