Home Featured நாடு கேஎல்ஐஏ 2 என்ற பெயரை மாற்றி அழைப்பது சட்ட மீறல் – எம்ஏஹெச்பி கூறுகின்றது!

கேஎல்ஐஏ 2 என்ற பெயரை மாற்றி அழைப்பது சட்ட மீறல் – எம்ஏஹெச்பி கூறுகின்றது!

788
0
SHARE
Ad

KLIA2கோலாலம்பூர் – கோலாலம்பூரின் இரண்டாவது விமான நிலையமான கேஎல்ஐஏ 2- வை, எல்சிசி 2 என்ற பெயரில் ஏர் ஆசியா நிறுவனம் கூறிவருவது, வான் போக்குவரத்துச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக மலேசியா ஏர்போட் ஹோல்டிங்க்ஸ் பெர்ஹாட் (MAHB) நிர்வாக இயக்குநர் பாட்லிஷாம் காசாலி இன்று தெரிவித்துள்ளார்.

என்றாலும், எல்சிசி2 என்று ஏர் ஆசியா வெறும் பேச்சு வழக்கில் கூறிவதைத் தடுக்க முடியாது. அது அவர்களின் கருத்துரிமை என்று கூறும் பாட்லிஷாம், அவர்கள் தங்களது விற்பனைச் சீட்டுகளிலோ அல்லது அறிவிப்புகளிலோ எல்சிசி2 என்று குறிப்பிடாத வரை எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஓடுபாதையில் விரிசல்கள், தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்குப் பள்ளங்கள் இருப்பதை ஒப்புக் கொள்ளும் அவர், அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice