Home Featured நாடு “நான் அம்னோவில் இருந்து விலகுகிறேன்” – ஷாபி அப்டால் அறிவிப்பு!

“நான் அம்னோவில் இருந்து விலகுகிறேன்” – ஷாபி அப்டால் அறிவிப்பு!

710
0
SHARE
Ad

MOHD SHAFIE APDALகோலாலம்பூர் – அம்னோவில் இருந்து தான் விலகுவதாக முன்னாள் அமைச்சர் மொகமட் ஷாபி அப்டால் அறிவித்துள்ளார்.

இன்று மதியம் சபா, செம்பூர்ணாவிலுள்ள அவரது இல்லத்தில் சுமார் 1000 ஆதரவாளர்கள் முன்னிலையில் ஷாபி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“சபாவிலும், தீபகற்ப மலேசியாவிலும் நமது இனத்தையும், நாட்டையும் தற்காத்து வரும் போராட்டம் தொடரும். என்னுடைய தவறுகளுக்காக அல்லது அம்னோ தலைவராக நான் பதவி வகித்த போது நடந்த தவறுகளுக்காக  நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று ஷாபி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் 1எம்டிபி நிறுவனம் குறித்து எதிர்கருத்துக்களை தெரிவித்ததற்காக கடந்த ஜூன் 24-ம் தேதி, கட்சியின் உதவித் தலைவர் பதவியில் இருந்து ஷாபி அப்டாலை நீக்குவதாக அம்னோ உச்ச மன்றம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.