கோலாலம்பூர் – விகடகவி புரோடக்சன்ஸ் தயாரிப்பில் மலேசியாவின் இளம் பெண் இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கத்தில், அவரே கதாநாயகியாகவும் நடித்துள்ள ‘கீதையின் ராதை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 22-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.
இத்திரைப்படத்தில் கர்ணன் ஜிகிராக், விக்ரான் இளங்கோவன், மலேசியாவின் புகழ்பெற்ற மூத்த நடிகர் கே.எஸ்.மணியம், குணசேகரன், ஷான், இசையமைப்பாளர் பாலன்ராஜ், சுவர்ணா பஞ்சவர்ணம், கண்ணன் ராஜமாணிக்கம் எனப் பலர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், ஜித்திஸ் இசையில், பாடல்களுக்கு கவிநாயகன் யுவாஜி வரிகள் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் ஜங்லீ மியூசிக் (Junglee Music) நிறுவனம் இத்திரைப்படத்தின் இசையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகின்றது.
இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘என்னைக் கொல்லாதே’ பாடல் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அப்பாடலை கீழ்காணும் யூடியூப் இணைப்பின் வழியாகக் காணலாம்:-