Home Featured தமிழ் நாடு “நான் நிரபராதி! ஜாமீன் வேண்டும்” ராம்குமார் மனு!

“நான் நிரபராதி! ஜாமீன் வேண்டும்” ராம்குமார் மனு!

808
0
SHARE
Ad

சென்னை – சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையாளி என காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ராம்குமார் பிணை (ஜாமீன்) விடுதலை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளான்.

Ramkumar-chennai-swathi-murdererதான் கொலை செய்யவில்லை என்றும், குற்றமற்றவன் என்றும், தன் மீது கொலை வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது என்றும் ராம்குமார் (படம்) தனது பிணை மனுவில் தெரிவித்துள்ளான்.

மேலும் தனக்கு கழுத்தில் ஏற்பட்ட காயங்கள் தற்கொலை முயற்சியால் ஏற்பட்டது அல்ல என்றும், காவல் துறையினர் தன்னைக் கைது செய்ய முற்பட்டபோது பிளேடால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் என்றும் ராம்குமார் அதிரடியாக தனது மனுவில் தெரிவித்துள்ளான்.

#TamilSchoolmychoice

தான் ஓர் ஏழை என்பதால் என்மீது காவல் துறை இந்தக் கொலை வழக்கைத் திணிக்க முற்பட்டுள்ளனர் என்றும் ராம்குமார் குறிப்பிட்டுள்ளான்.

இந்த விவரங்களை ராம்குமார் சார்பில் அவனது வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.