Home Featured நாடு சவுதி குண்டுவெடிப்பில் மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை!

சவுதி குண்டுவெடிப்பில் மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை!

536
0
SHARE
Ad

Saudi attackகோலாலம்பூர் – சவுதி அரேபியா, மதினாவிலுள்ள நபாவி மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில், மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை என மலேசிய வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியது.

எனினும், இந்தச் சம்பவத்தை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இன்று வெளியிட்ட செய்தியறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை, அம்மசூதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் இரண்டு பாதுகாவலர்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice