Home Featured உலகம் டாக்கா கிஷோர்காஞ்ச் தாக்குதல் : இறுதி நிலவரங்கள்!

டாக்கா கிஷோர்காஞ்ச் தாக்குதல் : இறுதி நிலவரங்கள்!

732
0
SHARE
Ad

டாக்கா: இன்று காலை டாக்காவுக்கு அருகில் உள்ள கிஷோர்காஞ்ச் என்ற இடத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த இறுதி நிலவர செய்திகள்:

Bangladesh-Kishoreganj-Solakia-Attack

  • இரண்டு பேர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
  • அவர்களில் ஒருவர் போலீஸ்காரர், மற்றொருவன் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி!
  • ஒரு வாரத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலாகும் இது!
  • போலீஸ் வாகனங்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
  • டாக்காவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தாக்குதல் நடத்தப்பட்ட கிஷோர்காஞ்ச் என்ற இடம்.
  • ஈத் பெருநாள் தொழுகையை நடத்திய மதகுருவைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்.
  • வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹாசினா தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தாக்குதல் நடத்தியவர்கள் மனித இனத்திற்கே எதிரானவர்கள் எனக் கடுமையாகக் கூறியுள்ளார்.

(மேலும் செய்திகள் தொடரும்)