Home உலகம் புதிய போப் பிரான்சிஸ் இன்று பதவி ஏற்கிறார்: வாடிகனில் விழா ஏற்பாடுகள் தீவிரம்

புதிய போப் பிரான்சிஸ் இன்று பதவி ஏற்கிறார்: வாடிகனில் விழா ஏற்பாடுகள் தீவிரம்

646
0
SHARE
Ad

Pope-Francis-Sliderவாடிகன், மார்ச்.19-கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள போப் பிரான்சிஸ், பதவியேற்கும் விழா இன்று (19ந்தேதி) நடக்கிறது. வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் நடைபெறும் வழிபாட்டில் பங்கேற்கும் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் முன்னிலையில், 266வது போப்பாக பிரான்சிஸ் முறைப்படி பதவியேற்று கொள்கிறார்.

அவரது வாழ்க்கை குறிப்பு இதோ உங்களுக்காக…

போப் பிரான்சிஸ் அர்ஜென்டினா நாட்டின் புவெனோஸ் ஐரெஸ் நகரைச் சேர்ந்தவர். இவர் இத்தாலிய வழிமரபைச் சேர்ந்த மரியோ ஜோசே பேர்கோக்லியோ – ரெஜினா மரியா சிவொரி தம்பதியரின் 5 குழந்தைகளில் ஒருவராக 1936 டிசம்பர் 17ந்தேதி பிறந்தார்.

#TamilSchoolmychoice

பெற்றோர் இவருக்கு இட்டப் பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக் லியோ. சிறு வயதில் குறும்புத் தனமாக இருந்த இவர் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டினார். 21வது வயதில் கத்தோலிக்க குருவாக விரும்பி, 1958 மார்ச் 11ந்தேதி இயேசு சபையில் சேர்ந்தார். அங்கு வேதியியல் பட்டப் படிப்பையும், தத்துவயியல், இறையியல் படிப்புகளையும் முடித்து 1969 டிசம்பர் 13 அன்று குருவானார்.

இயேசுவைப் பாதுகாத்து வளர்த்த புனித ஜோசப் எளிமையான வாழ்க்கை நடத்திய நேர்மையாளர் என்று பைபிள் கூறுகிறது. அதே வழியில் வாழ்ந்த புனித பிரான்சிஸ் பெயரைக் கொண்ட புதிய போப்பும், புனித ஜோசப் திருவிழாவில், திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.