Home Featured தமிழ் நாடு சுவாதி கொலை வழக்கு: முகமட் பிலால் என்பவரிடம் காவல்துறை விசாரணை!

சுவாதி கொலை வழக்கு: முகமட் பிலால் என்பவரிடம் காவல்துறை விசாரணை!

762
0
SHARE
Ad

Swathi-murder-chennaiசென்னை – இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை வழக்கு தொடர்பில், ராம்குமார் என்ற இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், சுவாதியின் நண்பர் முகமது பிலாலிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

அவரிடம் நேற்று புதன்கிழமை இரவு, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் 2 மணி நேரம் காவல்துறை விசாரணை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

இதனிடையே, வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி, ராம்குமாரிடம் காணொளி வடிவில் வாக்குமூலம் பெற காவல்துறைத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice