Home Featured நாடு எம்எச்370: விமானி ஜஹாரி மீதான கூற்றுக்கு ஆதாரமில்லை – லியாவ் கருத்து!

எம்எச்370: விமானி ஜஹாரி மீதான கூற்றுக்கு ஆதாரமில்லை – லியாவ் கருத்து!

589
0
SHARE
Ad

Liow-Tiong-Laiபுத்ராஜெயா – மாயமான எம்எச்370 விமானத்தின் விமானி கேப்டன் ஜஹாரி அகமட் ஷா, தனது வீட்டில் இருந்த மாதிரி விமான இயக்கம் (Home Simulator) மூலம் பயிற்சி செய்து பார்த்த ஆயிரம் பாதைகளில் இந்தியப் பெருங்கடல் பாதையும் ஒன்று என மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.

எனினும், விமானி ஜஹாரி வேண்டுமென்றே விமானத்தைக் கடலில் செலுத்தியிருக்க வேண்டும் என்ற கூற்று உறுதியாகவில்லை என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.

“இன்று வரையில் அந்தக் கூற்று விசாரணையில் தான் உள்ளது. விமானி ஜஹாரி வேண்டுமென்றே இந்தியப் பெருங்கடலில் விமானத்தை இறக்கினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை” என்று லியாவ் இன்று வியாழக்கிழமை  நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice