Home Featured உலகம் நம்ப முடியாத ஒளிக் காட்சிகளுடன் ஒலிம்பிக்ஸ் கோலாகலத் தொடக்கம்!

நம்ப முடியாத ஒளிக் காட்சிகளுடன் ஒலிம்பிக்ஸ் கோலாகலத் தொடக்கம்!

686
0
SHARE
Ad

olympics-view-opening ceremony

ரியோ டி ஜெனிரோ -பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இன்று சனிக்கிழமை மலேசிய நேரப்படி காலை 7.00 மணியளவில் (பிரேசில் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு)  பிரேசில் நாட்டின் தேசிய கீதம் ஒலிக்க கோலாகலமாகத்  ஒலிம்பிக்ஸ் போட்டிகள் வண்ணமயமான திறப்பு விழாவுடன் தொடங்கின.

  • ஏறத்தாழ 2 இலட்சம் பேர் குழுமியிருந்த புகழ்பெற்ற மரக்கானா அரங்கில் கண்களையே நம்ப முடியாத அளவுக்கு ஒளிக் காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.
  • நடு அரங்கத்தில் அலையுடன் கூடிய கடல், அடர்ந்த காடுகள், கட்டிடங்களுடன் கூடிய நகர்கள் என மாறி மாறி வினாடிக்கு வினாடி ஒளிக் காட்சிகளாக காட்டப்பட அரங்கமே அதிசயித்து அதிர்ந்தது.
  • புவி வெப்பமாயதல் – அதைத் தடுக்க வேண்டும் என்ற செய்தியையும் திறப்பு விழா உள்ளடக்கியிருந்தது.
  • பின்னர் ஊர்வலமாக நாடுகளின் விளையாட்டாளர்கள் வந்தபோதும், உலக பசுமைமயமாக்கத்தின் நினைவாக, ஒரு சிறுவன் அல்லது சிறுமியோ ஒரு செடியையும் கரங்களில் ஏந்தி நடந்து வந்தனர்.
  • உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இரசிகர்களும் தொலைக்காட்சிகளில் நேரலையாக இந்த திறப்பு விழாவைக் கண்டு களித்தனர்.

olympics - Maracanã stadium

#TamilSchoolmychoice

ஒலிம்பிக்ஸ் திறப்பு விழா அரங்கேறிய மரக்கானா அரங்கம்…

  • பின்னர் பங்கு பெறும் நாடுகளின் விளையாட்டாளர்கள் வரிசையாக அணிவகுத்து வரும்போது, அதில் முதல் நாடாக வரும் கௌரவம் கிரீஸ் நாட்டுக்கு வழங்கப்பட்டது. கிரீஸ்தான் ஒலிம்பிக்ஸ் போட்டியை முதன் முதலாக நடத்திய நாடு என்பதால் இந்த கௌரவம்.
  • மொத்தம் 207 நாடுகளைச் சேர்ந்த 11,456 விளையாட்டாளர்கள் இந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கு பெறுகிறார்கள்.