Home Featured உலகம் ஒலிம்பிக்ஸ் : தொடக்க விழா வித்தியாச செய்திகள்!

ஒலிம்பிக்ஸ் : தொடக்க விழா வித்தியாச செய்திகள்!

623
0
SHARE
Ad

olympics-Fireworks-opening ceremony-Maracana-Stadium

ரியோ டி ஜெனிரோ – இன்று சனிக்கிழமை காலை (மலேசிய நேரம்) ரியோ டி ஜெனிரோ நகரின் மரக்கானா அரங்கில் வாண வேடிக்கைகளுடன் (மேலே படம்) நடந்த ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவின் சில வித்தியாச செய்திகள் – தகவல்கள் :

  • அணிவகுத்து வந்த ஒவ்வொரு நாட்டின் விளையாட்டுக் குழுவின் முன்னால் ஒருவர் சைக்கிள் ரிக்‌ஷா போன்ற வண்டியில் முன் சென்று வழி நடத்தினார்.
  • ஸ்பெயின் நாட்டு விளையாட்டாளர்கள் அணிவகுத்து வந்த போது அதில் இடம் பெற்ற ஒரு ஜோடி விளையாட்டாளர்கள் தொலைக்காட்சி கேமரா முன்னால் வந்து முத்தம் கொடுத்துக் கொண்டனர்.
  • பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் கெரி, அமெரிக்க விளையாட்டாளர்கள் அணிவகுத்து வந்தபோது பரபரப்பாக தனது செல்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
  • நாடுகள் வரிசையாக அணிவகுத்து வந்தபோது, அகர வரிசைப்படி வந்தனர். ஆனால் அவர்கள் பின்பற்றியதோ, பிரேசில் நாட்டின் அதிகாரபூர்வ மொழியான போர்ச்சுகீஸ் மொழியின் படியான நாடுகளின் பெயர்கள். எனவே ஆங்கில அகர வரிசைப்படி அல்லாமல் நாடுகள் மாறி மாறி வந்தன.
  • மலேசியக் குழுவுக்கு கொடியேந்தி அணிவகுத்து வந்தவர் மலேசியப் பூப்பந்து விளையாட்டாளர் லீ சோங் வெய். இதுவரை ஒலிம்பிக்ஸ் தங்கம் வெல்லாத மலேசியாவுக்கு முதல் தங்கள் வென்று கொடுப்பார் என நாடே லீ சோங் வெய்யைத்தான் இந்த முறை நம்பியிருக்கின்றது.
  • மலேசிய விளையாட்டாளர்கள் மலாய் பாரம்பரிய முறைப்படி சொங்கோக் அணிந்து, மலாய் உடையில் அணிவகுத்து வந்தனர்.