Home Featured உலகம் எஸ்.ஆர்.நாதன் இன்னும் சுயநினைவின்றி தான் உள்ளார் – லீ சியான் லூங் தகவல்!

எஸ்.ஆர்.நாதன் இன்னும் சுயநினைவின்றி தான் உள்ளார் – லீ சியான் லூங் தகவல்!

664
0
SHARE
Ad

LeeHsienLoongசிங்கப்பூர் – சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் இன்னும் சுயநினைவின்றி கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக, அவரைப் பார்வையிட்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.

என்றாலும் உடல் இயக்கத்திற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நேற்று வெள்ளிக்கிழமை தனது பேஸ்புக்கில் கவலை தெரிவித்துள்ள லீ சியான் லூங், அவருக்கு தக்க சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice