Home Featured உலகம் ஒலிம்பிக்ஸ் தீபம் ஏற்றப்பட்டு போட்டிகள் அதிகாரபூர்வ தொடக்கம்!

ஒலிம்பிக்ஸ் தீபம் ஏற்றப்பட்டு போட்டிகள் அதிகாரபூர்வ தொடக்கம்!

1030
0
SHARE
Ad

olympic-flagரியோ டி ஜெனிரோ – இன்று கோலாகலமான, வண்ணமயமான ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தொடக்க விழாவில் முத்தாய்ப்பாக, பிரேசில் நாட்டின் மரத்தோன் நெடுந்தூர ஓட்டக்காரர் வாண்டர்லெய் டி லிம் என்பவர் ஒலிம்பிக்ஸ் தீபம் ஏற்றிவைக்க போட்டிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கின.

பிரேசில் நாட்டின் காற்பந்து உலகின் மறக்க முடியாத கதாநாயகனும், உலகம் எங்கும் கோடிக்கணக்கான இரசிகர்களின் ஆதரவைப் பெற்றவருமான பீலி இதற்கு முன்னர் ஒலிம்பிக்ஸ் தீபத்தை ஏற்றி வைத்துப் போட்டிகளைத் தொடக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

olypics-peleஆனால், தனது உடல் நிலை சரியில்லை என்றும், தசைவலியால் அவதிப்படுவதாகவும் கூறியிருக்கும் பீலி (படம்), தான் ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இருப்பினும் “தனது நினைவுகளும், சக்தியும் மரக்கானா அரங்கில், உங்களுடன்தான் இருக்கும். உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என பீலி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.