Home Featured நாடு மலேசியாவில் சர்ச்சைக்குரிய ‘போக்கிமோன் கோ’ அறிமுகமானது!

மலேசியாவில் சர்ச்சைக்குரிய ‘போக்கிமோன் கோ’ அறிமுகமானது!

547
0
SHARE
Ad

pokemon-go-application-400x200 (1)கோலாலம்பூர் – உலகளவில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய, போக்கிமோன் என்ற செல்பேசி விளையாட்டு தற்போது மலேசியாவிலும் அறிமுகமாகியுள்ளது.

இனி வீதியில் பலர் கையில் செல்பேசிகளுடன், கற்பனை உயிரினங்கள் பலவற்றைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

மலேசியாவில் அண்டிரோய்டு, ஆப்பிள் ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நியான்டிக் (Niantic) என்ற வடிவமைப்பு நிறுவனம் அதனை அறிமுகம் செய்துள்ளது.

#TamilSchoolmychoice

போக்கிமோன் என்ற விளையாட்டு வைரல் ஆகுமெண்டட் ரியாலிட்டி என்ற தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

அதாவது, நீங்கள் நடந்து செல்லும் பாதையில், பொய்யான கதாபாத்திரங்களை இருப்பது போல் மாயமாக சித்தரித்து, செல்போன் மூலம் தேட வைப்பது தான் ‘போக்குமோன் கோ’ விளையாட்டின் சிறப்பு.

இன்னும் விளக்கமாகச் சொன்னால், நாம் இருக்கும் இடத்தை செல்பேசியிலுள்ள ஜிபிஎஸ் (GPS) மூலமாகக் கண்டறிந்து, நாம் வைத்திருக்கும் திறன்பேசியின் திரையில் காட்சியாகக் காட்டுகிறது. பின்னர் நாம் நடந்து செல்லச் செல்ல நாம் திறன்பேசியின் திரையில் தேர்ந்தெடுத்துள்ள கதாப்பாத்திரமும் நடக்கிறது. அதாவது நம்மைப் பிரதிநிதித்து அக்கதாப்பாத்திரம் செயல்படுகின்றது.

பின்னர், நாம் இருக்கும் பகுதியில், உதாரணமாக ஒரு பூங்காவில் இருக்கிறோம் என்றால், அங்கு சில உயிரனங்களைத் தோன்றச் செய்கிறது. அதனை நாம் பிடிப்பதில் தான் விளையாட்டின் சுவாரசியம் அடங்கியுள்ளது.

இத்தனை நாட்களாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேலிச்சித்திரங்களாகப் பார்த்து வந்த இந்த போக்கிமோன் விளையாட்டை, தற்போது நவீன தொழில்நுட்பங்களின் வாயிலாக செல்பேசியில் விளையாட வைத்திருப்பது இளம் வயதினரைப் பெரிதும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சரி.. உலகளவில் இதில் என்ன தான் சர்ச்சை என்று கேட்கலாம். இந்த விளையாட்டைப் பொறுத்தவரையில் எளிதில் அடிமைப்படுத்திவிடும் என நம்பப்படுகின்றது. நடக்கும் போது, கார் ஓட்டும் போது இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் ஏதாவது விபத்தில் சிக்கிவிடக்கூடும் என்பதால் தான் உலகளவில் இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.