புத்ராஜெயா – தடைசெய்யப்பட்ட பகுதிகளில் போக்கிமோன் கோ விளையாட்டை விளையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
மெய்நிகர் (Virtual) விளையாட்டான போக்கிமோன் கோ-வைத் தடை செய்ய மலேசியாவில் சிறப்புச் சட்டங்கள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், எனினும், காவல்நிலையங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில் அது போன்ற விளையாட்டை விளையாடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
ஆகவே, போக்கிமோன் கோ விளையாட்டை விளையாடுபவர்கள் சட்டத்தை மீறாத வகையில் நடந்து கொள்ளும் படி காலிட் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக, அனுமதியின்றி யாருடைய வீட்டிற்குள்ளாவது நுழைவது, வாகனம் ஓட்டிக் கொண்டே விளையாடுவது உள்ளிட்டவைகளைத் தவிர்க்கும் படியும் காலிட் ஆலோசனை கூறியுள்ளார்.