Home Featured நாடு பினாங்கில் போக்கிமோன் விளையாட்டாளர்கள் மீது போலீஸ் புகார்!

பினாங்கில் போக்கிமோன் விளையாட்டாளர்கள் மீது போலீஸ் புகார்!

588
0
SHARE
Ad

pokemon-go-new3-1200x675ஜார்ஜ் டவுன் – லெபு ஆச்சே, லெபு கேனான் ஆகிய பகுதிகளில் போக்கிமோன் கோ விளையாட்டாளர்கள் ஏற்படுத்தும் சத்தமும், சாலைப் போக்குவரத்து நெரிசலும் தங்களுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த புகார்களையடுத்து, காவல்துறை சில போக்கிமோன் கோ விளையாட்டாளர்களை விசாரணை செய்துள்ளது.

மேலும், அவர்களிடம் சத்தத்தை ஏற்படுத்தக்கூடாது என்றும், சாலைப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது போல் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்ததாக ஜார்ஜ் டவுன் ஓசிபிடி துணை ஆணையர் மியார் பாரிடாலாத்ராஷ் வாஹிட் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice