Home Featured இந்தியா பூப்பந்து : நம்பிக்கை விதைத்திருக்கும் இந்திய விளையாட்டாளர்கள் சிந்து – ஸ்ரீகாந்த்!

பூப்பந்து : நம்பிக்கை விதைத்திருக்கும் இந்திய விளையாட்டாளர்கள் சிந்து – ஸ்ரீகாந்த்!

1365
0
SHARE
Ad

olympics-badminton-sindhu

ரியோ டி ஜெனிரோ – இதுவரை ஒலிம்பிக்சில் எந்தப் பதக்கங்களையும் பெறாமல் தடுமாற்றத்தில் இருக்கும் இந்திய விளையாட்டாளர்களுக்கு சற்றே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், இரண்டு பூப்பந்து விளையாட்டாளர்கள் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் பி.வி.சிந்து (மேலே படம்), சீனா தைவானின் தாய் ட்சு யிங்-கை, இரண்டு நேர் ஆட்டங்களில் (செட்) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். இன்று செவ்வாய்க்கிழமை சீனாவின் வாங் யீ ஹான்-னைச் சந்திப்பார். வாங் உலகின் இரண்டாவது நிலை ஆட்டக்காரர் என்பதால், சிந்து கடுமையான சவாலைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

olympics-badminton-srikanth kidambiஸ்ரீகாந்த் கிடம்பி…

ஆண்களுக்கான பூப்பந்து ஒற்றையர் ஆட்டத்தில், கிடம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க்கின் ஜான் ஜோர்கென்சனைத் தோற்கடித்து கால் இறுதிக்கு தேர்வாகியுள்ளார். டென்மார்க் வீரர் ஜான் உலகின் 5-வது நிலை விளையாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நேர் ஆட்டங்களில் வென்று ஸ்ரீகாந்த் தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

23 வயதான ஸ்ரீகாந்த் சீனாவின் பலம் வாய்ந்த விளையாட்டாளர் லின் டான்-னைச் சந்திப்பார். லின் டான் இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்ற விளையாட்டாளராவார்.