Home Featured உலகம் டோக்கியோவில் கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு – 15 பேர் காயம்!

டோக்கியோவில் கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு – 15 பேர் காயம்!

744
0
SHARE
Ad

firebomb-japanடோக்கியோ – ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திருவிழா ஒன்றில், 6 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில், ஒருவயதுக் குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு கை, கால்களில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை உயிருக்கு ஆபத்தான வகையில் யாருக்கும் காயம் எதுவும் இல்லை என்றும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெட்ரோல் குண்டு வீசியவனுக்கு 60 வயது என்றும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவன் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டான் என்றும் தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice