Home Featured நாடு சபா சட்டமன்றத் தொகுதிகள் 73 ஆக அங்கீகரிப்பு!

சபா சட்டமன்றத் தொகுதிகள் 73 ஆக அங்கீகரிப்பு!

935
0
SHARE
Ad

Sabah_map

கோத்தா கினபாலு – நடைபெறவிருக்கும் 14வது பொதுத் தேர்தலில் சபா மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது இருக்கும் 60 தொகுதிகள் என்ற நிலையில் இருந்து 73 ஆக உயர்த்தப்பட சபா சட்டமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை சட்டம் நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 55 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

#TamilSchoolmychoice

புதிய தொகுதிகள் எங்கு அமையும், எவ்வாறு அமையும் என்பது குறித்து மலேசியத் தேர்தல் ஆணையம் இனி நிர்ணயிக்கும்.

எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொகுதிகளை மறு சீரமைக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கின்றது.

இதற்கு முன்னர் 2003ஆம் ஆண்டில்தான் தொகுதி மறுசீரமைப்பு சபாவில் மேற்கொள்ளப்பட்டது.