புத்ராஜெயா – அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டறியும் விசாரணையில், கோலாலம்பூர் மாநகர சபையைச் (டிபிகேஎல்) சேர்ந்த “டத்தோஸ்ரீ” பட்டம் கொண்ட நிர்வாக இயக்குநர் ஒருவர் சிக்கியுள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை காலை புத்ராஜெயா குற்றிவியல் நீதிமன்றத்திற்கு, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகளால், முகம் மறைக்கப்பட்ட நிலையில், அந்த 54 வயது உயரதிகாரி அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், அவரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி நிக் இஸ்பஹானி தாஸ்னிம் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த வழக்கு, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் சட்டம், பிரிவு 17 (a), பிரிவு 23 ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்படவுள்ளதாக எம்ஏசிசியைச் சேர்ந்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.