Home Featured இந்தியா பூப்பந்து : சீன ‘மாமலை’ லின் டான்’னை 2-வது ஆட்டத்தில் தோற்கடித்த இந்தியாவின் ஸ்ரீகாந்த்!

பூப்பந்து : சீன ‘மாமலை’ லின் டான்’னை 2-வது ஆட்டத்தில் தோற்கடித்த இந்தியாவின் ஸ்ரீகாந்த்!

526
0
SHARE
Ad

 

olympics-badminton-lin dan

ரியோ டி ஜெனிரோ – (மலேசிய நேரம் 9.00 மணி நிலவரம்) பூப்பந்து விளையாட்டில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் லின் டான். ஏற்கனவே, பல உலகப் பட்டங்களைப் பெற்றவர். ஒலிம்பிக்சில் இரண்டு முறை தங்கம் வென்றவர்.

#TamilSchoolmychoice

பூப்பந்து விளையாட்டில் சீன ‘மாமலை’யான இவருடன் இன்று கால் இறுதி ஆட்டத்தில் மோதிய ஸ்ரீகாந்த் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தார். லின் டான்னிடம் ஸ்ரீகாந்த் தோல்வியடைவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

ஆனால், எதிர்பாராதவிதமாக, இரண்டாவது (செட்) ஆட்டத்தில் 21-11 புள்ளிக் கணக்கில் லின் டானைத் தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ஸ்ரீகாந்த்.

தற்போது 3-வது செட் ஆட்டம் நடைபெற்று வருகின்றது. இதிலும் ஸ்ரீகாந்த் வென்று சாதனை படைப்பாரா? காத்திருக்கிறது இந்தியா!